“கருப்பு திங்கள்” -கேள்விபட்டீர்களா!!?? : உஷார்!!!! முதலீட்டளர்கள்!!!!!!

“கருப்பு திங்கள்” -கேள்விபட்டீர்களா!!?? : உஷார்!!!! முதலீட்டளர்கள்!!!!!!

பங்குச்சந்தை வர்த்தகர்கவாசிகளுக்கு  1987-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்து தான். 30 வருடத்துக்கு  முன்பு 1987-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி அமெரிக்க பங்குச்சந்தை  கடுமையான உருவானது. 1929-ம் ஆண்டு சர்வதேச பெரு மந்த நிலை ஏற்பட்ட போது உருவான சரிவை விட இது அதிகம். 1987-ம் ஆண்டு ஒரே நாளில் டோ ஜோன்ஸ் 22.6 சதவீதம் சரிவு ஏற்பட்டது. இதற்கு முன்னும், பின்னும்  இவ்வளவு பெரிய சரிவு பங்குச் சந்தைகளில் உருவானது இல்லை.
இதற்க்கு காரணம்,  1982-ம் ஆண்டு முதல் சந்தையில் ஏற்றம் தொடங்கியது.

அப்போது தொடங்கிய ஏற்றம் 1987-ம் ஆண்டு வரை வரை பெரிய சரிவு இல்லாமல் இருந்தது. அதனால்  நிறுவனங்களின் மதிப்புக்கும், பங்கு விலைகளுக்கும் இடையே வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மேலும் அப்போது பெர்சியா பகுதியில் பதற்றமான சூழல் இருந்தது. மேலும்  பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தது. இதனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறுகிய கால வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்திக்கொண்டே இருந்தது. மேலும் இந்த சமயத்தில் கம்ப்யூட்டர் மூலமான வர்த்தகம் தொடங்கி இருந்தது. ஏற்கெனவே  இருந்த பதற்றம் மேலும் அதிகமாகி  பலரும் பங்குகளை விற்க ஆரம்பித்தனர். இவை அனைத்தும் சேர்ந்து ஒரே நாளில் 22.6 சதவீத சரிவுக்கு காரணமாக அமைந்தது.

மீண்டும் அதே நிலை வரும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் ராபர் ஷில்லர் கருத்து தெரிவித்திருக்கிறார் அதில்   “பங்குச்சந்தை 1987-ம் ஆண்டை போலவே பெரும் சரிவை சந்திக்கும் . முதலீட்டாளர்களிடம் ஏற்பட்ட பதற்றம் காரணமாகவே அப்போது பங்குசந்தை சரிந்தது. இந்த பதற்றம் மனித இயல்பு, இதே போன்ற பதற்றம் மீண்டும் முதலீட்டாளர்களிடம் உருவாகலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

பங்குச்சந்தையில் சரிவு வருவதற்கான வாய்ப்பு எப்போதுமே இருக்கிறது. 20 சதவீதத்துக்கும் மேல் கூட பங்குச்சந்தையில் சரிவு ஏற்படலாம். ஆனால் 22 சதவீதம் ஒரே நாளில் சரிவதற்கான வாய்ப்பு குறைவு. சர்க்கியூட் பிரேக்கர் முறை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி இந்திய சந்தையில் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவை 20 சதவீத சரிவை தொட்டவுடன் பங்குச்சந்தையின் வர்த்தகம் அன்றைய நாளில் முழுமையாக நிறுத்தப்படும். 10 சதவீதம், 15 சதவீதம் சரியும் பட்சத்தில் குறிப்பிட்ட நேரம் நிறுத்தப்படும். அமெரிக்காவிலும் 20 சதவீத சரிவை தொட்டவுடன் வர்த்தகம் நிறுத்தப்படும்.

1929-ம் ஆண்டு சரிவு ஏற்பட்ட போது மந்த நிலை உருவானது. ஆனால் 1987-ம் ஆண்டு மந்த நிலை உருவாகவில்லை.  சரிவு ஏற்பட்டாலும் அதனைத் தொடர்ந்து பங்குச்சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன. அனைத்து சரிவுகளிலும் முதலீட்டளர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும். ஆனால் முதலீட்டாளர்களுக்கு கடந்த கால சரிவுகளில் மட்டுமே வாய்ப்புகள் தென்படுகின்றனவே தவிர தற்கால சரிவுகளில் வாய்ப்புகளைக் கண்டறிவதை விட பதற்றமே அதிகமாக இருக்கிறது.
முதலீட்டளர்கள் பயத்தை குறைத்து நிதானமாக செயல்பட்டால் இந்த “கருப்பு திங்கள்” வந்தாலும் சமாளிக்கலாம்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *