உபி., மாநிலம் அயோத்தியில் அரசு செலவில் மிக பிரம்மாண்டமான வகையில் தீபாவளி கொண்டாடினார் முதல்வர் யோகி….!

உபி., மாநிலம் அயோத்தியில் அரசு செலவில் மிக பிரம்மாண்டமான வகையில் தீபாவளி கொண்டாட மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நேற்று அயோத்தியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது 2 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. முன்னதாக ராமர், சீதை, லட்சுமணர் வேடம் அணிந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு அழைத்து வரப்பட்டனர். ராமர் சீதை போல வேஷ மணிந்த நாடக நடிகருக்கும் நடிகைக்கும் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாலையணிவித்து மலர்கள் தூவி தீபாராதனை காட்டி பூஜைகள் செய்தார்.. இதில் கவர்னர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறுகையில்.உ.பி.யில் பா.ஜ. 14 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ளது. ராமாயணத்தில் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பினார். இதையெல்லாம் கொண்டாடும் விதமாக தான் தற்போது உபி.யில் பா.ஜ. ஆட்சி நடப்பதால் அதனை கொண்டாடவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் என்னவொரு ஆச்சரியமென்றால் புராண கால ராமர் லட்சுமணர் சீதை நடந்தே போனார்கள். அவசர காலங்களில் புஷ்பக விமானங்களில் பறந்தார்கள்.பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் அவர்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்கள் – அயோத்தி நகரில் – உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத்தின் சிறப்பு தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக…..

author avatar
Dinasuvadu desk

Leave a Comment