விவேகம் படத்தின் ட்ரைலர் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

தற்போது இயக்குனர் சிவா ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் ட்ரைலர் இன்றிரவு 12.01க்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா அஜித் மற்றும் காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இயக்கி வரும் விவேகம் படத்தின் முதல் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றதோடு உலகஅளவில் ட்ரெண்டானது. ஆனால் படத்திற்கான ட்ரைலர் வெளியிடப்படாததால் ரசிகர்கள் உற்சாகம் குறைந்திருந்தனர்.
இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியும் வகையில் அதற்கான அறிவிப்பை இயக்குநர் சிறுத்தை சிவா வெளியிட்டார். தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை நள்ளிரவு 12 மணிக்கு விவேகம் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்றும், சினிமா விரும்பிகள், ஊடக நண்பர்கள் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு நடிகர் அஜித் சார்பிலும் விவேகம் டீம் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

author avatar
Castro Murugan

Leave a Comment