Uncategory
வெனிசூலா அரசியல் நிர்ணய சபை கூட்டத் தொடர் தொடக்கம்…!
ஆக-8 வெனிசூலாவில் கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் பதவியேற்ற பின்னர் அதன் முதல் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அந்த நாட்டில் புதிய அரசியல் சாசனத்தை இயற்றுவதற்காகப் புதிய அரசி யல் நிர்ணய சபையை அமைக்க அதிபர் நிக்கோலஸ் மடூரோ முடிவு செய்தார்.
அதற்கான தேர்தல் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடை பெற்றது. எதிர்க்கட்சிகள் புறக்கணித்த அந்தத் தேர்தலில் ஆளும் சோஷலிஸ்ட் கட்சியினர் ஒரு தலைப்பட்சமாக வென்று அரசியல் நிர்ணய சபையை ஆக்கிரமித்துள்ளனர். அதிபரின் மனைவியும் மகனும் உள்பட அந்த சபையில் உள்ள 545 உறுப்பினர்கள் உள்ளனர்.1999-இல் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தை ரத்து செய்து புதிய அரசியல் சாசனத்தை இயற்ற இந்த சபை உருவாக்கப்பட் டுள்ளது. நாட்டின் அதிபருக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்குவது இதன் ஒரே இலக்கு.நாடாளுமன்றம் இன்னும் செயல்பாட்டில் உள்ள நிலையில் அரசியல் நிர்ணயசபை உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கே பெரும்பான்மை உள்ளது. சர்வதேச எதிர்ப்பு, உள்நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்பு, புறக்கணிப்புக்குப் பிறகும் முறைகேடான தேர்தல் நடத்தி தேர்ந் தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையை ‘மோசடி சபை’ என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டு வருகின்றன.தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிபருக்கு எதிராக கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறை ஆர்ப்பாட்டங் களில் 125 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந் தனர். நாட்டு மக்களும், உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று வெனிசூலா அதிபருக்கு வாடிகன் அறிவுரை கூறி அறிக்கை வெளியிட்டது.
ஆனால் வெனிசுலாவில் நடக்கும் உள்நாட்டு கலவரம் அமெரிக்காவின் சதிகளாலும் தூண்டுததாலும் அரங்கேற்றப்படுகிறது,மேலும் தனது ஆட்சி அதிகாரத்தின் கிழே வெனிசுலாவை கொண்டுவரதுடிக்கிறது என்பது சோசியலிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும்
