முன்பதிவே திணறுகின்றது, இந்தியளவில் மெர்சல் படைத்த சாதனை

மெர்சல் தீபாவளி ரசிகர்களை செம்ம கொண்டாட்டத்திற்கு எடுத்து செல்லவுள்ளது. தளபதியை ஸ்கிரீனில் பார்த்தால் போதும் என்று ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.தற்போது
20 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ‘மெர்சல்’ டிக்கெட்.

தற்போது பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது, அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புல் தான், இதில் நேற்று சென்னையின் பிரபலமான திரையரங்கம் வெற்றியில் முன்பதிவு தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில நொடிகளில் பலரும் புக்கிங் செய்ய சர்வரே சில மணி நேரம் வேலை செய்யவில்லை.

இந்நிலையில், சென்னையில் ரோகிணி, பரிமளம், மர்லின் ஆகிய தியேட்டர்களில் மட்டும் ‘மெர்சல்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அந்தப் பகுதிகளில் ரசிகர்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மெர்சல்’ டிக்கெட்டுகளை வாங்க சென்னை, கேரளாவில் இருந்து கூட ரசிகர்கள் ராம் முத்துராம் தியேட்டருக்கு வந்துள்ளனராம்.
மேலும், இந்தியளவில் அதிகம் டிக்கெட் புக்கிங் செய்த படமாக மெர்சல் வந்துள்ளது, கண்டிப்பாக இதேபோல் வசூலிலும் சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.