சொத்துக்குவிப்பு வழக்கில் போயஸ்கார்டன் உள்ளதா ? – உயர் நீதிமன்றம் கேள்வி?

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 17-ம் தேதி அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியைத் தொடங்கினர். போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்குவதை எதிர்த்து, திருச்சியைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
சொத்துக்குவிப்பு வழக்கில் வேதா இல்லம் இடம்பெற்றிருக்கிறதா என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், சொத்துக்குவிப்பு வழக்கில் போயஸ் கார்டன் வேதா இல்லம் இடம்பெறவில்லை என்றும், இதுதொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அரசுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment