குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

நெல்லை மாவட்டத்தில், தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டு தண்ணீர் கொட்டியது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, அருவியில், நீர் வரத்து சீராக உள்ளதால், பயணிகள் குளிக்க காவல் துறையினர் அனுமதி அளித்தனர். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகாரித்து காணப்பட்டது.

Leave a Comment