பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை!!!

கவுரி லங்கேஷ் கன்னட எழுத்தாளர் லங்கேஷின் மகளான கவுரி லங்கேஷ் என்பவர், லங்கேஷ் பத்ரிகே என்ற வாரப் பத்திரிகையை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வீட்டிற்கு காரில் வந்த அவரை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர், வீட்டுக்குள் நுழைந்ததும் துப்பாக்கியால் திடீரென சுட்டனர்.
அடுத்தடுத்து 3 குண்டுகள் உடலில் பாய்ந்ததில், கவுரி லங்கேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் மர்ம நபர்கள் தப்பிஓடிவிட்டனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவுரி லங்கேஷின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்றது மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர். 

Leave a Comment