அமெரிகாவில் இந்திய மாணவர் பலி!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ‘ஹார்வி’ புயல், சமீபத்தில் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், 127 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால், இங்கு, 1.30 கோடி பேர், மின் இணைப்பு, குடிநீர் இன்றி தவிக்கின்றனர்.இந்நிலையில், புயல் தாக்கிய அன்று, சுற்றுலா ஸ்தலமான பிரையன் பகுதியில் உள்ள ஏரியில், நீச்சல் அடிக்க சென்ற, இந்திய மாணவர்களான, நிகில் பாட்டியா, 20 மற்றும் ஷாலினி, 20, ஆகிய இருவரும் புயலில் சிக்கினர்.கடுமையான மழையைத் தொடர்ந்து, வெள்ளத்தில் அவர்கள் மூழ்கினர்; அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் நிகில் பாட்டியா சிகிச்சை பலனின்றி இறந்தார். ஷாலினி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.நிகில் பாட்டியா ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர், ஷாலினி டில்லியை சேர்ந்தவர். இருவரும் டெக்சாஸ் ஏ அன்ட் எம் பல்கலையில் பொது சுகாதாரத்தில் முதுகலை படிப்பு படித்து வருகிறார்.

Leave a Comment