சென்னையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை கைது செய்யக்கோரி மாணவர்கள் முற்றுகை போராட்டம்…!

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் சென்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பங்கு தந்தை ஆரோக்கியம் பாலியல்குற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.மற்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.திருவொற்றியூர் போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பின்பு குற்றாவாளி மீது FIR பதிவு செய்யபட்டது. திருவொற்றியூர்காவல்துறையினர் கூடுதல் கவனத்தோடு தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இவன் கிறிஸ்தவத்திற்கு எதிரானவன் என அப்பகுதி பங்கு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நபர் ஏற்கனவே 3முறை இதுபோன்ற தவறிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கல்வி நிலைய வளாகாங்களில் இது போன்ற சம்பவங்களை தடுக்க பாலியல் சமத்துவ குழுவை அமைக்க வேண்டும்.

தாளாளர் ஆரோக்கியத்தை கைது செய்து மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று இந்திய மாணவர் சங்கத்தின்(SFI) வட சென்னை மாவட்ட குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment