சேரியில் தங்கபோகும் காயத்ரி

நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என ஜாதிய வெறியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை திட்டியது பூதாகரமாக வெடித்துள்ளது.

சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் கூறியதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன. பல எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை இதற்கு தெரிவித்துள்ளனர்.
காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜாவும் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னதாக இந்து மக்கள் கட்சி இந்த நிகழ்ச்சி குறித்து புகார் அளித்துள்ளது. நடிகர் கமல் உள்பட அனைத்து போட்டியாளர்களையும் கைது செய்ய அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னர் கூட காயத்ரி ரகுராம் எச்ச என கூறியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சேரி பிஹேவியர் என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சேரி பிஹேவியர் என்று பிக்பாஸில் ஓவியாவை திட்டும் காயத்ரி மூலம் அவரது ஜாதிய வன்மம் வெளிப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் கருத்துக்கள் வருகிறது. சேரி பிஹேவியர் என்று சொன்ன காயத்ரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். பட்டியல் சாதி மக்களை வார்த்தை ரீதியாக இழிவு படுத்துவது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015-இன் கீழ் குற்றமாகும்.
இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்குவதை விட காயத்ரி ரகுராம் சேரியில் 10 நாட்கள் தங்கவேண்டும். 10 நாட்கள் சேரியில் தங்கியிருந்தால் அந்த மக்களை பற்றி நடிகை காயத்ரி ரகுராம் தெரிந்து கொள்வார் என கூறியுள்ளார்.இதற்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் 
author avatar
Castro Murugan

Leave a Comment