இம்சை பண்ணும் கதாநாயகன் : ட்ராப் பண்ணிய புலிகேசி படக்குழு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வைகைபுயல் வடிவேலு நடித்து சிம்புதேவன் இயக்கிய திரைப்படம் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ இப்படம் வந்த புதிதில் பெரும் தாக்கத்தை பெற்றது. மாபெரும் வெற்றியடைந்தது.

இதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக ஷங்கர் தனது சமூகவளைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இதன் வேலையை இயக்குனர் சிம்புதேவன் ஆரம்பித்து இருந்தார், இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர்

சார்பில் புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டது. அதில் ‘ இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்காக  வடிவேலுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர் பல காரணங்கள் கூறி படபிடிப்புக்கு வர மறுக்கிறார். எனவும் அவரிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி  வாங்கி தருமாறும், தயாரிப்பு நிறுவனம் வேறு ஒரு ஆளை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது’.
இதனால் வடிவேலு ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.   

Leave a Reply

Your email address will not be published.