உங்கள் வைபை நெட்வொர்க்கை பாதுகாப்பது எப்படி?

தற்போதைய டெக்னாலஜி உலகில் மால்வேர் தாக்குதல் செய்பவர்கள் மற்றும் ஹேக்கர்கள் பெருகி வரும் நிலையில் அலுவலக பணிகளை உங்கள்  வீட்டின் வைபை நெட்வொர்க்கில் இருந்து செய்வதால்    நெட்வொர்க்கை  ஹேக் செய்ய எளிதாக அமைந்துவிடுகிறது.

பெயரை மாற்றுதல்:

ஹேக்கர்களை சமாளிக்க முதலில் அனைவரும் செய்ய வேண்டியது வைஃபையின் பெயரை மாற்றுவது. வைபையில் உள்ள பெயரை மாற்றிவிட்டால் ஹெக்கர்களுக்கு அது ஒரு சவாலாக இருக்கும்.

பாஸ்வேர்டு  மாற்றுதல்:

வைபை ரூட்டர் வாங்கும்போது அதில் ஏற்கனவே ஒரு பாஸ்வேர்டு இருக்கும். அந்த பாஸ்வேர்டை புதிய  ஹேக்கர்கள் கூட மிக எளிதில் ஊகித்து விடுவார்கள். எனவே ரூட்டர்களில் உள்ள பாஸ்வேர்டை கடினமானதாக மாற்றுங்கள். 20 டிஜிட்டில் எண்கள், எழுத்துக்கள், அடையாள குறியீடுகள் ஆகியவற்றை கலந்து பாஸ்வேர்டு உருவாக்குங்கள்

என்கிரிப்ஷன் எனேபிள் செய்தல்:

என்கிரிப்ஷன் என்பது வைபைக்கு சம்பந்தப்பட்டவர்களை மட்டும் அனுமதிப்பது. இந்த வசதியை எனேபிள் செய்து கொண்டால் பெயர் தெரியாத மர்ம நபர்கள் நெட்வொர்க்கில் நுழைய முடியாது.
இந்த என்கிரிப்ஷனில் பல வகை உண்டு. WEP, WPA or WPA2 ஆகிய வகைகளில் WEP என்பது பழைய வகை. இதை தவிர்ப்பது நல்லது. WPA2 லேட்டஸ்ட் வகை, இதனை உபயோகித்தால் பாதுகாப்பு அதிகம்

ரிமோட் சிஸ்டத்தை  டிஸேபிள் செய்தல்:

பெரும்பாலான வைபை நிறுவனங்கள் ரிமோட் சிஸ்டத்தை அனுமதிக்கும்படிதான் வைத்திருப்பார்கள். ஆனால் இது ஹேக்கர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் மிக எளிதாக உள்ளே நுழைய வழிவகுத்துவிடும்.
எனவே இந்த ரிமோட் சிஸ்டத்தை டிஸேபிள் செய்து வைக்க வேண்டியது மிக முக்கியம். இதை டிஸேபிள் செய்துவிட்டால் யாராலும் உங்களுடைய வைபையை பயன்படுத்த முடியாது. இதை செய்வதற்கு ரிமோட் ஆக்சஸ் அல்லது ரிமோட் அட்மின் சென்று டிஸேபிள் செய்யலாம்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment