இரட்டை வரி விதிப்பை எதிர்த்து மீண்டும் ஸ்டிரைக்கில் குதித்த திரையரங்குகள்…!

இரட்டை வரி விதிப்பை எதிர்த்து இன்று முதல் மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து விதிக்கப்பட்ட 30% கேளிக்கை வரியை எதிர்த்து திரைத்துரையினர் வேலைநிறுத்தம் நடத்தியதால் திரையரங்குகள் மூடப்பட்டன.
இதனால், அந்த கேளிக்கை வரி அமலாகாமல் இருந்தது. இந்த நிலையில், திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கேளிக்கை வரி 20% ஆகக் குறைக்கப்பட்டு 10% ஆக நிர்ணையிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு செப்டம்பர் 27-ஆம் தேதியை முன் தேதியிட்டு அமலுக்கு வந்துள்ளது.
புதிய தமிழ் படங்களுக்கு 10% வரியும், மற்ற மொழிப் படங்களுக்கு 20% கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு 7% கேளிக்கை வரியும், மற்ற மொழித் திரைப்படங்களுக்கு 14% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
கேளிக்கை வரி குறைக்கப்பட்டாலும், நிறுத்தி வைக்கப்பட்ட கேளிக்கை வரியை அமல்படுத்தியதால் டிக்கெட் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு மக்களே பலி.
இதனால் ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை வரி என இரட்டை விரிகள் விதிப்பதை எதிர்த்து இன்று முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என்று மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஆனால் இங்கு டிக்கெட் விலையேற்றம் சாமானியனை திரைஅரங்கின் நுழைவாயில் வரை மட்டுமே அனுமதிக்கிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment