ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிலம் வழங்க மாட்டோம்… – கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்…!!!

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நிலம் வழங்கமாட்டோம் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது எனவும் நெடுவாசல் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனைக் கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ஆம் தேதி தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர்.
அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து நெடுவாசலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நிலம் வழங்கமாட்டோம் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது எனவும் நெடுவாசல் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Leave a Comment