தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடிவருகிறது. இன்று நடைபெற்று வரும் முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹீம் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்க தரப்பில் நட்சத்திர பௌலேர் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளை எடுத்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச வீரர் ஒருவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அடித்த முதல் சதம் இதுவாகும். 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி தற்போது விளையாடி வருகிறது.