ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய் வருமா? உஷார்… !!!

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.2600 கோடி வழங்க அந்நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மக்கள் இன்னும் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கியே தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் ஈவா எக்கேவர்ரியா (63) ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு 2007-முதல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்ப்பப்பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளாக மரணபடுக்கையில் படுத்துள்ள ஈவா, தன்னுடைய சிறு வயது முதலே ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயனபடுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளத்தை அந்நிறுவனம் முன்னெச்சரிக்கையாக அறிவிப்பதை தவிர்த்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ செலவு மற்றும் அபராதத்தொகையாக 417 மில்லியன் டாலர்கள் (ரூ. 2672 கோடி) வழங்க உத்தரவிட்டுள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment