குளத்தூர் அருகே வாலிபர்க்கு கத்தி குத்து-தூத்துக்குடியில் பரபரப்பு !!!

0
176

குளத்தூர் அருகே துலுக்கன்குளத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டி மகன் ஜெயக்குமார்(29), செவல்பட்டி கீழத்தெருவை சேர்ந்த வெள்ளச்சாமி மகன்கள் பெரியாசமி(24), ரமேஷ்(22) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பெரியசாமி, ரமேஷ் ஆகியோர் சேர்ந்து ஜெயக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் கத்திகுத்து பட்ட ஜெயக்குமாரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
தகவலறிந்த குளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பு மற்றும் போலீசார் விசாரணை நடத்திய தப்பியோடிய பெரியசாமி, ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்தனர். பின்னர் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here