காஷ்மீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு!!

புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: புதிய இந்தியாவுக்கு காஷ்மீர் பிரிவினைவாதம், நக்சலைட் பிரச்னை, வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் ஆகியவை பெரும் சவாலாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது.

இந்த பிரச்னைகளை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நான் உறுதியாக கூறமுடியும். வரும் 2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா உருவாக்கப்படும். அதற்கு முன்னதாக இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதனை நான் நாட்டு மக்களுக்கு உறுதியாக கூறிக் கொள்கிறேன். 1942ம் ஆண்டு வெள்ளையனை வெளியேற்றுவோம் என்ற உறுதி மொழியை இந்திய மக்கள் எடுத்துக் கொண்டார்கள். 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. தற்போது காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என்ற உறுதி மொழியை ஏற்போம். 5 ஆண்டுகளில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வையும் காண்போம். என்று கூறினார்.

Leave a Comment