Uncategory
தமிழ் பிக் பாஸ் கமலிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் – கன்னட பிக் பாஸ் சுதீப்
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
தமிழ் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓவியா வெளியேறிய பின்னர் கிட்டத்தட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியே கோமா நிலைக்குதான் சென்றுவிட்டது.
இந்த நிலையில் கன்னட பிக் பாஸ் அடுத்த பாகத்தை புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்க இருக்கிறது.
நான்கு பாகங்கள் முடிந்து ஐந்தாம் பாகத்தை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்க இருக்கின்றனர்.
ஏற்கனவே முதலாம் மற்றும் நான்காம் பாக கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், தற்போது இந்த ஐந்தாம் பாகத்தையும் தொகுத்து வழங்கவுள்ளார்.
இவர் ‘நான் ஈ’ படத்தில் வில்லனாகவும், விஜய் நடித்த ‘புலி’ படத்திலும் வில்லனாக நடித்த இவர் “முடிஞ்சா இவன புடி” படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.
இவர் கூறியது, ‘‘தமிழ் பிக் பாஸில் நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அதனை கன்னட பிக் பாஸில் பயன்படுத்த உள்ளேன்’’ என்றார்.
இந்த முறை கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல முக்கிய விஐபி-க்கள் களமிறங்க உள்ளனர் என்பது கொசுறு தகவல்.
