குற்றாலம்: கல்லுரி மாணவிகளின் கருத்தெடுப்பு..,

 குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆய்வு நடத்தினர்.

தமிழகத்தில் அருவிகளின் நகரமாக விளங்கும் இயற்கை அன்னை கொடுத்த கொடையாக கருத்தப்படுவது குற்றாலம். சீசன் காலங்களில் சுமார் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பொருளாதாரத்துறை மாணவிகள் ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்வர். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு நடைபெற்றது.
இதில் சுகாதாரம், அடிப்படை வசதிகள்,தங்கும் வசதி, உணவகங்கள், திருடர்கள் தொல்லை, வாகன நிறுத்தும் இடத்திற்கான கட்டணங்கள், உடைமாற்றும் அறை வசதிகள், பொழுது போக்கு வசதிகள், அருவிகளுக்கு செல்லும் பாதைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம், குற்றாலத்தின் அழகை பாதுகாக்கும் ஆலோசனைகள் கழிவறை வசதி , உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தனியாக வருபவர்கள், நண்பர்களோடு வருபவர்களிடம் கேட்டு படிவத்தில் நிரப்பி ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த ஆய்வின் போது வாகன கட்டண வசூல், திருட்டு பயம், பொழுதுபோக்கு அம்சங்கள், சாலை வசதிகள், இரவு நேரத்தில் குளிப்பதற்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், படகு துறை வசதி, அருவிகளை பாதுகாக்க தேவையான அலோசனைகள் உள்ளிட்ட கேள்விகளையும் கேட்டு சர்வே செய்தனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment