Uncategory
பாரதிய ஜனதா கட்சியின் மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக மீம்மிஸ் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
பாஜல தொழில்நுட்ப பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் போன்ற தலைவர்களை பற்றி முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவர்களின் புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து பதிவிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
