பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை …தீவிரவாதி சுட்டுக்கொலை!

Image result for KASHMEER ARMY

இந்திய எல்லையான காஷ்மீரில்தொடர்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர் .இந்நிலையில் ஜம்முவில் உள்ள ஹன்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கூறப்பட்ட பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்கினர். இதனையடுத்து பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதலை தொடுத்தனர். 
Image result for KASHMEER ARMY
இந்த துப்பாக்கி சண்டையின் போது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். அவனிடமிருந்து நவீன ரக துப்பாக்க மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனிடையே தீவிரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. எனவே அங்கு உள்ள மக்களும் தொடர்ந்து பதற்றத்தில் உள்ளனர் . 

Leave a Comment