முதல் இடத்தில் மெர்சல் : ஆளபோறான் தமிழன்

0
157
விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறான்’ பாடல் தொடர்ச்சியாக சமூகவலைதளத்தில் முதல் இடத்தில் நீடித்து வருகிறது.
‘மெர்சல்’ படத்தின் முதல் பாடலாக ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல், சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டது. அன்று முதலே பலராலும் பகிரப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன. மேலும், யூ-டியூப் தளத்தில் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ பதிவுகளும் வெளியிடப்பட்டது. இதில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் வரிகள் வீடியோ 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
மேலும், அனைத்து இசைக் கேட்கும் சமூகவலைதளங்களிலும் இப்பாடல் முதல் இடத்தில் நீடித்து வருகிறது. இதனை ‘மெர்சல்’ படத்தின் இசை உரிமையை பெற்றிருக்கும் சோனி மியூசிக் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான படங்களின் பாடல்கள் அனைத்து தளங்களிலும் முதல் இடத்தில் நீடிக்கும் பாடல் ‘ஆளப்போறான் தமிழன்’ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தீபாவளி அன்று இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.