ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் புதிய சாதனை..,

புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்தாலும், எதிர்க்கட்சிகளால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார், 72, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களில், அதிக ஓட்டுகள் பெற்றவர் என்ற, 50 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர், ராம்நாத் கோவிந்த் அமோக வெற்றி பெற்றார். காங்கிரஸ் உட்பட, 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார், மொத்தமுள்ள, 10.69 லட்சம் ஓட்டுகளில், 3.67 லட்சம் ஓட்டுகளை பெற்றார்.இதன் மூலம், ஜனாதிபதி தேர்தலில், தோல்வியடைந்த வேட்பாளர்களில், அதிக ஓட்டுகள் பெற்று, 50 ஆண்டு சாதனையை அவர் முறியடித்தார்.கடந்த, 1967ல் நடந்த தேர்தலில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து, தேர்தலில் போட்டியிட்ட சுப்பாராவ், 3.63 லட்சம் ஓட்டுகளை பெற்றதே, இதுவரை சாதனையாக இருந்தது.அதே நேரத்தில், தோல்வியடைந்த வேட்பாளர், அதிக ஓட்டு சதவீதம் பெற்ற, சுப்பாராவின் சாதனை முறியடிக்கப்படவில்லை. சுப்பாராவுக்கு, 43 சதவீத ஓட்டுகள் கிடைத்தன; மீராகுமாருக்கு, 34 சதவீத ஓட்டுகளே கிடைத்தன.

author avatar
Castro Murugan

Leave a Comment