பிரதமர் மோடியை திருமணம் முடிக்க ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் போராடும் பெண்…கண் அசைப்பாரா பிரதமர் …?

பிரதமர் மோடியைத் திருமணம் செய்யவேண்டி டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் ஒருவர் தர்ணா நடத்திவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓம் சாந்தி சர்மா என்ற 40 வயது பெண் தான் இந்த விசித்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மோடியின் புகைப்படத்துடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.
பிரதமர் மோடியைத் திருமணம் செய்வதுகுறித்து சாந்தி கூறுகையில், எனது முதல் திருமணம் முறிந்தது. அதற்குப் பிறகு, என்னைத் திருமணம் செய்ய ஏராளமானோர் முன்வந்தனர். ஆனால் அவர்களை எல்லாம் திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. பிரதமர் மோடியைத்தான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.
பிரதமர் தனியாக இருக்கிறார். நாட்டிற்கே சேவை செய்யும் பிரதமரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு நான் சேவை செய்ய விரும்புகிறேன். அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி தர மறுக்கின்றனர் அதிகாரிகள் என்று கூறுகிறார் அப்பெண்.மேலும் அவர் கூறுகையில் நான் ஏதோ பேராசைப்படுவதாக  மக்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். எனக்கு ஏராளமான நிலங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் விற்று, மோடியை நான் பார்த்துக்கொள்வேன். பிரதமர் என்னை வந்து சந்திக்கும் வரை ஜந்தர் மந்தரில்  போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
சாந்திக்கு  20 வயதில் மகள் உள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் அந்த பெண், டெல்லியில் குருத்வாரா கோயில்களுக்குச் சென்று சாப்பிட்டுக் கொள்கிறார். பொதுக் கழிவறையைப் பயன்படுத்திக்கொண்டு, செப்டம்பர் 8-ம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

Leave a Comment