தினகரனுக்கு எதிரான தீர்மானம் ஆவணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது: கே.பி.முனுசாமி பேட்டி

புதுடெல்லி: ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள மனுவிற்கு வலுசேர்க்கும் வகையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார். டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார். தினகரன் நியமனம் செல்லாது என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அளித்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். 

Leave a Comment