ஜியோ ஃபோன் புக்கிங் இன்று தொடங்குது!!!

ஜியோ ஃபோன் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 24 முதல் இதற்கான முன்பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.4 ஜி வசதிகொண்ட இந்த ஜியோ ஃபோன் முகப்பு கேமரா, ஜிபிஎஸ் வசதி என ஸ்மார்ட் போனில் இருக்கும் அத்தனை வசதிகளும் இருக்கும். 22 இந்திய மொழிகள் உட்பட மைக்ரோ எஸ்டி மற்றும் குரல் வழி உத்தரவுக்கு கீழ் படியும் வகையில் இருக்கும்.
ஜியோபோன் விலை ஜீரோ மட்டுமே, ஆனால் ரூ. 1500 திரும்ப பெறதக்க வகையிலான வைப்புத் தொகையாக செலுத்தப்பட வேண்டும். இந்த வைப்புத் தொகை மூன்று வருடங்களுக்கு பிறகு அதாவது 36 மாதங்களுக்கு திரும்ப பெறலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த ஃபோனை புக் செய்ய வாடிக்கையாளர்கள் கட்டாயம் தங்களது ஆதார் கார்டை வைத்திருக்க வேண்டும்.

Leave a Comment