கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்பாட்டினை பாராட்டிய மதிமுக பொதுசெயலாளர் வைகோ….!

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.
மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் ஆகம முறைப்படி பயிற்சி பெற்ற அனைத்து சாதியர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோயில் அர்ச்சகர்களாக தேர்வு செய்துள்ளது கேரள அரசு.
இதில் 26 பேர் பிராமணர்களையும் பிராமணர் அல்லாதோர் 36 பேரையும் சேர்த்து 62 பேர் நியமனம் செய்துள்ளனர்.
இதில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேரையும் தேர்வு செய்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெளியிட்டுள்ள அறிக்கையில், தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் வைக்கத்தில் போராடி வெற்றி கண்டதாகவும், அதே மண்ணில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கேரளாவில் வெற்றி பெற்ற பெரியாரின் கனவு அவர் பிறந்த தமிழகத்தில் செய்ய முடியவில்லையே என வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை ஏற்கனேவே திமுக-ஸ்டாலின்,விசிக-திருமாவளவன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பெரியாரிய எழுத்தாளர்கள்,பெரியாரிய அமைப்புகள்,நடிகர் கமல்ஹாசன் ஆகியோரை தொடர்ந்து மதிமுக பொதுசெயலாளர் வைகோவும் பாராட்டியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment