ரத்த குழாய் அடைப்பை போக்கும் பசலைக் கீரை ஜூஸ்..!

மனித உடல் உறுப்புகளில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் கல்லீரல் ஆகியவை மிகவும் முக்கியமானது.அத்தகைய உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ரத்தக் குழாய் அடைப்புகளை நீக்க பசலைக் கீரையின் ஜூஸ் உதவுகிறது.

ஜூஸ் செய்முறை:

ஒரு டம்ளர் பசலைக் கீரை ஜூஸ் மற்றும் அதனுடன் குறிப்பிட்ட அளவு ஆளி விதைகளை சேர்த்து அரைத்து நன்கு கலந்துக் கொண்டால் ஜூஸ் தயார்.

குடிக்கும் முறை:

பசலைக் கீரை ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குறைந்தது 2 மாதத்திற்கு தொடர்ந்து குடிக்க வேண்டும்.

நன்மைகள்:

தினமும் குடித்து வந்தால் இதயம் மற்றும் ரத்தக் குழாயை சுத்தம் செய்து, இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.
பசலைக் கீரை ஜூஸை குடிக்கும் போது, கொழுப்புசத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
தினமும் பசலைக் கீரை ஜூஸ் குடிப்பதுடன், சிறிது நேரம் உடற்பயிற்சி செய்து வந்தால், ரத்தோட்டம் சீராகி, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கலாம்.

Leave a Comment