இந்தியாவின் இரும்பு மனிதரின் பிறந்த நாள் !பிரதமர் மோடி உரை !

0
241

இன்று மிகவும் முக்கியமான நாள் ஆகும் .இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் ஆகும் 
இன்றைய  ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய, இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் அமைந்துள்ள சர்தார் பட்டேல் சவுக்கில், வல்லபாய் பட்டேலின் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு த்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பிரதமர் மோடி டெல்லி தயான் சந்த் மைதானத்தில் ஒற்றுமைக்கான ஓட்டத்தைத் துவக்கிவைத்தார். இந்த ஓட்டத்தில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 ஏனெனில் இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அவர் அரும்பாடுபட்டார். அதனால் தான் அவரது பங்களிப்பை இன்றைய இளம் தலைமுறையினர் மதிக்கின்றனர் என்றார். ஆனால் சர்தார் படேலின் பங்களிப்பை புறக்கணிக்கவும், மறைக்கவும் முயற்சி நடைபெற்றதாக சாடினார். இந்திய வரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய் பட்டேலின் தியாகம் நினைவு கூறப்படும் என்றார். பன்முகத் தன்மை கொண்ட நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்பில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here