அனிதா மறைவுக்கு நீதி கேட்டு அமைதி ஊர்வலம்

0
130

அரூர்: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், அனிதா மறைவுக்கு நீதி கேட்டு, பல்வேறு அமைப்பினர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா, 17. நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததால், இவருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால், நேற்று முன்தினம் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அவரது மரணத்திற்கு நீதி கேட்டும், நேற்று, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் எதிரே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல், அரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் அமைதி ஊர்வலமாக வந்து, கச்சேரிமேட்டில் வைக்கப்பட்டிருந்த அனிதாவின் உருவ படத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தினர். அரூர் ஒன்றிய தி.மு.க., சார்பில், கச்சேரிமேட்டில் வைக்கப்பட்டிருந்த அனிதாவின் உருவப் படத்திற்கு தி.மு.க.,வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here