தன்னை படுக்கைக்கு அழைத்தவருக்கு அதிரடி பரிசு கொடுத்த ஐஸ்வர்யாராய்….!

உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் பல முன்னணி நடிகர்களின் ஆசையாகவும் கனவாகவும் எப்போதும் இருந்து வந்தது. தற்போது அத்தகைய ஐஸ்வர்யா ராயை  அடைந்தே ஆக வேண்டும் என்று துடித்த பிரபல இயக்குனர் பற்றி ஐஸ்வர்யா ராயின் முன்னாள் மேனேஜராக இருந்த சீமோன் ஷெப்பீல்டு மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது…  “நான் ஐஸ்வர்யா ராயின் மானேஜராக இருந்தேன். அப்போது வெயின் ஸ்டீன், ஐஸ்வர்யா ராயை தனியாக சந்திக்கத் துடித்தார். அதை என்னிடம் அவராகவே முன்வந்து தெரிவித்தார். தன்னுடன் ஐஸ்வர்யா ராயை தனியாக அனுப்பி வைக்கும்படி பல முறை என்னிடம் கூறியபோது கூட அவருடைய நோக்கம் எனக்குத் தெரிந்ததால் பல முறை அவர் என்னிடம் சொல்லியும் நான் அதை ஏற்கவில்லை. நானும் ஐஸ்வர்யா ராயும் பெயின்ஸ் டீன் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்ற போது, அவர் என்னிடம் மறைமுகமாக வந்து, “நான் ஐஸ்வர்யாவை தனியாக சந்திக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “அது நடக்காது” என்று நான் கூறினேன்.

பின் நானும் ஐஸ்வர்யா ராயும் ஓட்டலுக்குத் திரும்பியதும், ஒரு பொம்மை வாங்கி அதில் டயட் கோக்கை வைத்து அவருக்கு பரிசாக அனுப்பினோம் என தெரிவித்துள்ளார்.ஏற்கனவே வெயின் ஸ்டீன் பல நடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published.