அரியானா மாநில அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்!!!

பஞ்சகுலா நகரத்தில் நடந்த வன்முறையை மாநில அரசு வேடிக்கை பார்த்ததாக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. 
பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் ராம் ரஹீமை குற்றவாளி என பஞ்சகுலா கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அங்கு பெரும் கலவரம் மூண்டது. இந்த கலவரம் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவியது. இந்த கலவரத்தில் 32 பேர் பலியானார்கள். பொது சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்கள் தீக்கிரையாகின. 600 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலவரத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க தேரா சச்சா சவுதா அமைப்பின் சொத்துகளை முடக்க பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் உத்தரவிட்டது.

Leave a Comment