மீண்டும் ரூபாய் நோட்டில் மாற்றமா?

நீல நிறம்கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டுகள் புத்தாண்டு முதல் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், பழைய 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிகிறது. மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளிவரும் இந்த ரூபாய் நோட்டின் பின்புறம், தென்னிந்தியாவைச் சேர்ந்த கோயில் ஒன்று இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் புதிய 50 ரூபாய் நோட்டுகள்குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

author avatar
Castro Murugan

Leave a Comment