அதிரிந்தி(மெர்சல்) வெளியாவது உறுதி : ரிலீஸ் தேதி உள்ளே

தீபாவளியன்று வெளியான ‘தளபதி’யின் மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி வசூலை வாரி குவித்து வருகிறது. இதன் வசூல் தற்போது வரையில் ரூ 210 கோடி வசூலாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தெலுங்கு வெளியீடான ‘அதிரிந்தி’ படத்தின் ட்ரைலர் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இதில் இடம்பெற்ற அரசியல் வசனங்களால் இப்படம் வெளியாக சற்று தாமதம் ஆனது.

இந்நிலையில் இப்படம் வருகிற நவம்பர் 7 அம்ம தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தின் அரசியல் வசனங்களுக்கு இருக்கும்  வரவேற்ப்பை பார்த்து மற்ற நடிகர்களும் தங்களது படங்களில் அரசியல் வசனங்களை வைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published.