ஜியோ இன் : ஏர்செல், வோடபோன், ஐடியா, அவுட்

கடந்த ஜூலை­யில், ஐடியா செல்­லு­லார், வோட­போன் உள்­ளிட்ட நான்கு நிறு­வ­னங்­கள், 43.7 லட்­சம் மொபைல் போன் சந்­தா­தா­ரர்­களை இழந்­துள்ளன.
இது குறித்து, இந்­திய செல்­லு­லார் ஆப்­ப­ரேட்­டர்­கள் சங்­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஜூலை­யில், ஐடியா செல்­லு­லார், வோட­போன், ஏர்­செல், டெலி­னார் ஆகிய நிறு­வ­னங்­கள், 43.7 லட்­சம் மொபைல் போன் சந்­தா­தா­ரர்­களை இழந்­துள்ளன. இதில், ஐடியா செல்­லு­லார், 23 லட்­சம்; வோட­போன், 13.89 லட்­சம்; ஏர்­செல், 3.91 லட்­சம்; டெலி­னார், 2.75 லட்­சம் என்ற அள­வில், சந்­தா­தா­ரர்­களை இழந்­துள்ளன.


அதே சம­யம், ஜூலை­யில், ஏர்­டெல் நிறு­வ­னம், 6 லட்­சம் புதிய மொபைல் போன் சந்­தா­தா­ரர்­களை இணைத்­து உள்­ளது. இதன் மூலம், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த மொபைல் போன் சந்­தா­தா­ரர்­கள் எண்­ணிக்கை, 28.12 கோடி­யாக உள்­ளது. சந்­தா­தா­ரர்­களை சேர்த்­த­தில், உ.பி., கிழக்கு, 8.41 கோடி உடன் முத­லி­டத்­தி­லும்; மஹா­ராஷ்­டிரா, பீஹார் மாநி­லங்­கள், அடுத்த இடங்­க­ளி­லும் உள்ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment