தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!-அ.தி.மு.க-வில் பரபரப்பு !!!

அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைந்த உடன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்தனர்.அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக  ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அரசு கொறடா ராஜேந்திரன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment