ஐ.பி.எல். அனுபவம் கைகொடுக்கும்’ – பவுல்க்னெர் நம்பிக்கை..!

எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் மற்றும் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவில் விளையாடி இருக்கிறார்கள். இதில் கிடைத்த அனுபவங்கள் இந்த தொடரில் சாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கும். சமீபகாலமாக நிறைய ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி இப்போது சிறந்த நிலையில் உள்ளது. எனவே இந்த தொடர் ஆஸ்திரேலியாவின் திறமையை சோதிக்கும் வகையில் சவாலாக அமையும்.
சென்னையில் வெப்பம் அதிகம் என்பதால், அதை சமாளிக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். இப்போது தான் பயிற்சியை முடித்து விட்டு வந்திருக்கிறேன். ஆனால் பாருங்கள், இன்னும் உடலில் இருந்து வியர்வை கொட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த கடினமான சூழலில் நன்றாக செயல்பட எங்களது வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மொத்தத்தில், இது நல்ல தொடராக இருக்கும்.இவ்வாறு பவுல்க்னெர் கூறினார்.

Leave a Comment