கேரளாவில் இன்று எதிர் கட்சியினர் பந்த் ……..! தேர்வுகள் ரத்து !!!

பெட்ரோல் பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த  தவறிய மத்திய, மாநில அரசுகள் கண்டித்து, கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இன்று காலை 6 மணி முதல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், பெட்ரோல் பம்ப்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை அங்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லைப்பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்படுகின்றன. தேனி மாவட்டம் வழியாக செல்லும் பேருந்துகள் குமுளி, கம்பம்மெட்டு வரை மட்டுமே இயக்கப்பட்டுவருவதால் மக்கள்பெரிதும் பாதிப்படைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.