அனல் பறக்கும் சிவகார்த்திகேயன் பட வியாபாரம் : வேலைக்காரன் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் “ரெமோ”.  தற்போது அதே நிறுவனம் சிவகார்த்திகேயனை  வைத்து எடுத்திருக்கும் திரைப்படம் “வேலைக்காரன்” இப்படத்தை ‘தனி ஒருவன்’ புகழ் மோகன் ராஜா இயக்குவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இதில் கதாநாயகியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வெகுவேகமாக  நடந்து வருகிறது.
இப்படத்தின் வியாபாரத்தை படக்குழு ஆரம்பித்துள்ளது. கோயம்புத்தூர் விநியோக உரிமையை கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் வாங்கியுள்ளது. மேலும் வட தென்  ஆற்காடு உரிமையை எஸ் பிச்சர்ஸ் விநியோக உரிமையை வான்கிவுள்ளது.   

இப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Comment