இது வரை போராட்டம் செய்யாத காவலர்கலும் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு!

Image result for tamil nadu போலீஸ்

தமிழ்நாட்டை பொறுத்தவரை போராட்டம் நடத்தாத ஒரே ஒரு அரசு ஊழியர்கள் காவல் துறை மட்டும் தான் .ஆனால் அதற்கே அடி சறுக்க  போகிறது . 7வது ஊதிய கமிஷன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசார் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.
ஏற்கனவே போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என பலமுறை போலீசார் போராட முன்வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதமும் மெரினாவில் குடும்பத்துடன் திரண்டு போலீசார் போராடப்போவதாக அறிக்கை வெளியானதை தொடர்ந்து மெரினா கடற்கரை மற்றும் தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று தேவர் குரு பூஜை அன்று தங்களது பட்டினி போராட்டத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
7வது ஊதிய குழு குறைகள், யூனிபாம், உணவு, ஓவர் டைம் ஊதியம், வார விடுமுறை போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து இன்று அனைத்து மாவட்ட காவலர்களும் ஒன்று கூடி இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக சமூகவலைதளங்களின் மூலம் காவலர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்காக இன்றைய பணி பட்டினியுடன் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீசாரின் இந்த ரகசிய அறிவிப்பு உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு காவல் மாவட்டத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அதன்படி யாராவது உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களது வேலையை காலி  செய்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment