சரஸ்வதி பூஜைக்கு குவியும் திரைபடங்கள்

சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு 8 படங்கள் வெளியீட்டை உறுதிப்படுத்தியிருப்பதால், விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விடுமுறையை கணக்கில் கொண்டு பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்திருக்கிறார்கள். இதனால் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.
இந்த தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ வெளியாகவிருந்தது. ஆனால், இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் டிசம்பரில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை.
மேலும், மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் ‘ஸ்பைடர்’, நயன்தாரா நடித்திருக்கும் ‘அறம்’, விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘கருப்பன்’, சந்தானம் நடித்திருக்கும் ‘சர்வர் சுந்தரம்’, சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே – 2’, ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘செம’, ஜெய் நடித்திருக்கும் ‘பலூன்’ மற்றும் கவுதம் கார்த்திக் நடித்திருக்கும் ‘ஹர ஹர மஹாதேவகி’ ஆகியவை செப்டம்பர் 29-ம் தேதி வெளியீடு என அறிவித்திருக்கிறார்கள்.
இவ்வளவு படங்களுக்கு எங்கே திரையரங்குகள் உள்ளது என்று விநியோகஸ்தர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இவற்றில் குறைந்தது 4 படங்களாவது பின்வாங்கிவிடும் என தெரிகிறது.

Leave a Comment