சசிகலாவை நீக்க பொதுக்குழு கூட்டம் எப்போது?…. எம்எல்ஏ, எம்.பிக்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை: சசிகலாவை நீக்குவது, இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக பொதுக் குழு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைப்புக்கு முன்னதாக ஓபிஎஸ் அணியின் கோரிக்கையான சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதை நிறைவேற்றுவதாக இணைப்பு நிகழ்ச்சியின்போது உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் தினகரனும் அன்றாடம் மூத்த நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறித்து வருகிறார். இதனால் சசிகலாவை நீக்குவது, இரட்டை இலை சின்னத்தை பெறுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த பொதுக் குழுவை செப்டம்பர் முதல் வாரத்தில் கூட்ட அதிமுக முடிவு செய்துள்ளது.
அது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் எம்எல்ஏ-க்கள், எம்பிக்கள் கலந்து கொள்கின்றனர்.
அதிமுகவில் பொதுக் குழுவில் 2,780 பேரும், செயற்குழுவில் 250 பேரும் உள்ளனர். இந்நிலையில் பொதுக் குழுவில் சசிகலாவை நீக்க முடிவு எடுக்காத வண்ணம் தினகரன் நிர்வாகிகளை மாற்றி வருவதும் அவர்களுடன் ஆலோசனை நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan

Leave a Comment