ஆண்டவன் சொல்லீட்டானோ அருணாச்சலம் ரஜினிகாந்த் ரியாக்சன்….!

இப்போது தமிழகத்தில் பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான “மெர்சல்” திரைப்படம். இப்படத்தில் ஜிஎஸ்டி குறித்தான வசனத்தை நீக்க சொல்லி பயங்கரமாக மிரட்டி வருகிறார்கள் பிஜேபி தலைவர்கள் தமிழிசை,பொன்னார்,ஹேச்.ராஜா,இல.கணேசன்.இந்நிலையில் விஜயையும் அவரது மதத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார் பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா.ஆனால் தற்போது விஜயோட வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டுள்ள ஹேச்.ராஜாவால் மேலும் பல சர்ச்சைகள் வெடித்துள்ளன.
அதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரைக்கும் தனது கருத்தை பதிவு செய்யாமல் மௌனமாக இருந்து வந்தார்.சீமான் போன்ற அரசியல்வாதிகள் ரஜினி தனது கருத்தை தெரிவிக்க ஆண்டவன் உத்தரவு வேண்டுமோ என்று கூறி நக்கலடித்தார். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ” இன்று மெர்சல் விவாதபொருளாக மாறியிருக்கிறது.இதனால் நான் மெர்சல் குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு தனது ஆதரவையும் மெர்சல் பிரச்சனையில் யாருக்கு என இரு வரிகளில் கூறிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

Leave a Reply

Your email address will not be published.