ஒவ்வொரு சதமும் சிறப்புதான் : இந்திய துணைகேப்டன்


நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுள்ளது  மேற்கொண்டுள்ளது.
நேற்றைய 3வது ஒரு நாள்  ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் கேப்டன் விராட்  ஹோக்லி 113 ரன்களும், துணை கேப்டன் ரோகித் சர்மா  147 ரன்களும் விளாசினார்.

இதில் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதனை வாங்கிகொண்ட அவர் அளித்த பேட்டியில் ‘அணி வெற்றி பெறும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் எங்களது பங்களிப்பு அதிகமாக உள்ளபோது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

நியூசிலாந்து அணி எங்களை எளிதில் வெற்றி பெற விடவில்லை, மிகவும் சவாலான அணி. கான்பூரில் நடந்த ஆட்டம் எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நல்ல நினைவுகள் கிடைத்தன( இதே மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா உடன் 150 ரன்கள் குவித்திருந்தார்) ஒவ்வொரு சதமும் தனி ஸ்பெஸல் தான்.

கடுமையான பயிற்சிக்கு பிறகு இந்த சத்தங்கள் கிடைக்கும் பொது மகிழ்ச்சி கிடைக்கிறது. எனது ஆட்டம் வலுபெற பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் முக்கிய காரணம் ‘ என தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *