தூத்துக்குடியில் தி.மு.க. பிரமுகர் காருக்கு தீவைப்பு!!!

தூத்துக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் வக்கீல் சுரேஷ்குமார். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே காரை நிறுத்தி இருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் சிலர் கார் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்து உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளனர். ஆனால் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாமல் உள்ளனர்.

Leave a Comment