நீட் தேர்வு.. மாணவர்களுக்கு பாதிப்பு கிடையாது..அமைச்சர் உறுதி..

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக டெல்லி சென்றுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, இருதரப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் தரும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மேலும், இந்தப் பிரச்சனையில் தாமதம் எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிதான் இது என்று தெரிவித்த அமைச்சர், நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது என்று கூறினார்.

Leave a Comment