திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா : மலைஎற்றதுக்கு தடை

0
634

திருவண்ணாமலை தீபத்திருவிழா வருகிற டிசம்பர் 2ஆம் தேதி நடக்கவுள்ளது. அதில்  பக்தர்கள் மகாதீபம் ஏற்றும் மலைமீது ஏற தடை விதித்துள்ளது. மேலும் கிரிவல பாதையில் அன்னதானம் வழங்கவும் தடை விதித்துள்ளது.

இதனை கடந்த செவ்வாய் கிழமையன்று நடந்த தீபத்திருவிழா முன்னேற்ப்பாடு குறித்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்.ரத்தினசாமி, கோயில் இணை ஆணையர் R.ஜெகநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவாளி பிரியா மற்றும் M.ரங்கராஜன், கோட்டச்சியர் உமா மகேஸ்வரி, ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் K.S.கந்தசாமி தலைமை தாங்கினார்.
இந்த கார்த்திகை தீபதிருவிழாவிற்க்காக மாவட்ட நிர்வாகம், அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம், காவல் துறை ஆகிய துறைகளின் மூலம் ருபாய்.7.5கோடி திரட்டப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

மலைஎற்றத்துக்கு தடை: திருவண்ணாமலை தீபம் ஏற்றும் மலையில் வயதானவர்கள்  ஏறும்  போது  சிலநேரம் உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கவே தற்போது மலைஎற்றதுக்கு மாவட்ட நிர்வாகம்  தடை விதித்துள்ளது.
அன்னதானம் வழங்க 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here