உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்கா முதலிடம் பெற்று அசத்தல்.

பதினாறாவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தையும், கென்யா இரண்டாம் இடத்தையும், தென் ஆப்பிரிக்கா மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
பதினாறாவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இலண்டனில் நடைபெற்று வந்தது. கடந்த 10 நாள்களாக நடைப்பெற்ற இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவோடு முடிவுக்கு வந்தது.
இதன் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 10 தங்கங்கள், 11 வெள்ளிகள், 9 வெண்கலங்கள் என மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.
கென்யா 5 தங்கங்கள், 2 வெள்ளிகள், 4 வெண்கலங்கள் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது.

தென் ஆப்பிரிக்கா 3 தங்கங்கள், ஒரு வெள்ளி, 2 வெண்கலங்கள் என 6 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தது.
சீனா 2 தங்கங்கள், 3 வெள்ளிகள், 2 வெண்கலங்கள் என 7 பதக்கங்களுடன் 5-வது இடத்தைப் பிடித்தது.
போட்டியை நடத்திய பிரிட்டன் 2 தங்கங்கள், 3 வெள்ளிகள், ஒரு வெண்கலத்துடன் 6-வது இடத்தையே பிடித்தது.
இந்த முறை 38 நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம்பிடித்தன. ஆனால் இந்திய அணி வழக்கம்போல் இந்த முறையும் பதக்கமின்றி வெறுங்கையோடு நாடு திரும்பியது என்பது கொசுறு தகவல்.

author avatar
Castro Murugan

Leave a Comment